விபத்து அபாயத்தில் மின்கம்பம்; மின்வெட்டால் அவதி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி  பெரியதெரு குடியிருப்போர் குமுறல்

தேனி : துார்வாராத கழிவுநீர் வாய்க்காலால் நிரம்பியுள்ள குப்பையால் கழிவுநீர் தெருவில் ஓடும் கழிவுநீர் அவல நிலை உள்ளது. அடிக்கடி ஏற்படும்மின்வெட்டால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்த இரும்பு மின்கம்பத்தை மாற்றி நடவடவடிக்கை எடுக்க 6 மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 14 வார்டு பெரிய தெருவில் வசிக்கும் குடியிருப்போர் குமுறுகின்றனர்.

இந்த வார்டில் பெரியதெரு அதன் குறுக்குத் தெருக்கள் 4 உள்ளன. இப்பகுதியில் 120 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 57 ஆண்டுகளுக்கு முன் மின்வாரியம் இரும்பிலான மின் கம்பங்கள் அமைத்தனர்.

தற்போதும் அவை பயன்பாட்டில் உள்ளது. பெரியத்தெருவில் முகப்பில் இருந்து உள்ளே செல்லும் போது முதல் இடதுபுற குறுக்குத்தெருவின் முகப்பில் இரும்பிலானமின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது கீழே விழுமோ என்ற அச்சத்தில் கடந்து செல்லும் நிலையில் உள்ளது. ஏனெனில் இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி கான்கீரிட் சிலாப்கள் உடைந்து, கற்கள் பெயர்ந்து விபத்து அபாயத்தில் உள்ளது.

இப்பகுதியில் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து அங்கு வசிக்கும் அன்பரசன், ஜெயவேல்முருகன், தனலட்சுமி, மங்கள்ஈஸ்வரி, சிவப்பிரியா, பேச்சியம்மாள் ஆகியோர் தினமலர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது:

குப்பையில் குடிநீர் குழாய் சேதமடைந்த மின்கம்பம் அருகே பேரூராட்சி குடிநீர் குழாய் அமைத்துள்ளது. அங்கு குப்பையும் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றவும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கவும் பல முறை பேரூராட்சி நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் மனுக்களைஅளித்தோம். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கூட புகார் அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மின்கம்பம்எப்போது விழுந்து அசம்பாவிதம் ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

மேலும் இப்பகுதியில் மின்கம்பத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் செல்ல அச்சமாக உள்ளது. தெருககளில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகஉள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

துார்வாரப்படாத சாக்கடை பெரியத் தெருவில் முகப்புப் பகுதியில் மழைநீர் எளிதாக கடந்து செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இது நீண்ட நாட்களாக துார்வாரப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசிவருகிறது. மழை காலம் துவங்குவதற்கு முன், அதில் தேங்கியுள்ள பாலிதீன் கழிவுகள், காகித குப்பை அகற்றியும், இதில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்றிட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement