தற்கொலை தடுப்பு தின ஊர்வலம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

துணை வேந்தர் ரவி தொடங்கி வைத்தார். இதில், பதிவாளர் செந்தில் ராஜன், சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை பேராசிரியர்கள் சுஜாதா மாலினி, குணசேகரன் சமூக நலத்துறை துறை தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement