தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி 44 தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்து அறிவித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சட்ட திருத்தம் கொண்டு வந்த நாளை நாடு முழுதும் கருப்பு தினமாக அறிவித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சுதேசி மில் அருகே கரும்பு கொடி ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், சி.ஐ.டி.யு. செயலாளர் சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்.பி.எப் அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொழிற்சங்கங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தியும், பேட்ஜ் அணிந்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும்
-
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர் இருவருக்கு உயர் பதவி
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்திற்கு 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை
-
திமுகவின் அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெயலலிதா தான்: இபிஎஸ் சுளீர்
-
சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது: நயினார் நாகேந்திரன்
-
அனுமன் பற்றி டிரம்ப் கட்சி பிரமுகர் சர்ச்சை பதிவு: அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கண்டனம்!
-
நவராத்திரி முதல் நாளில் 10 ஆயிரம் கார் விற்பனை: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு