கணவர் மாயம் மனைவி புகார்

புதுச்சேரி : கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.

முத்தியால்பேட்டை, சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன், 50; இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இதற்காக பணம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக, அவரது மனைவியிடம் கூறிவந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 1ம் தேதி, காரைக்காலுக்கு சென்று வருவதாக, அவரது மனைவியிடம் கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement