ஒடிசாவில் சோகம்: பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் பயணிகளுடன் சென்ற பஸ்சும் மோதி, காலை 11 மணிக்கு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பாசுதேவ் பெஹெரா கூறுகையில், ''சாலையில் பழுதுபார்க்கும் பணி காரணமாக பஸ் தவறான பாதையில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. ரூர்கேலாவிலிருந்து கொய்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது பஸ் விபத்தில் சிக்கி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது'', என்றார்.
மேலும்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்
-
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி