நவராத்திரி விழா கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், கோவில் மற்றும் வீடுகளில், கொலு பொம்மைகளுடன் சுவாமி சிலைகளையும் வைத்து, நவராத்திரி வழிபாடு கோலாகலமாக துவங்கியுள்ளது.

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரேமா கல்வி நிறுவனங்கள், வடக்கு ரோட்டரி நவராத்திரி குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட், திருப்பூர் தமிழ் சங்கம் சார்பில், 33வது நவராத்திரி கலை விழா துவங்கியுள்ளது.

தினமும் காலை, 11:00 மணிக்கு ஸ்ரீவிசாலாட்சியம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும், மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீவிசாலாட்சியம்மன் உற்சவர் அலங்கார பூஜையும், தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமிகோவிலில், முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழு மற்றும் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி சார்பில், நவராத்திரி கலை விழா நடந்து வருகிறது.

l ெஷரீப் காலனி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில், பி.என்., ரோடு சத்ய சாய் விஹார், காந்திநகர் சமிதி, ராக்கியாபாளையம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம் போன்ற இடங்களில், குலாலர் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா மற்றும் துர்கா பூஜை நடந்து வருகிறது.

l ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், 15ம் ஆண்டு நவராத்திரி விழா, கரட்டாங்காடு மக்கள் சேவை மையத்தில் நடந்து வருகிறது.

அவிநாசி ரோடு, சிருங்கேரி பீடம், ஸ்ரீசாரதாம்பாள் கோவில், புதுராமகிருஷ்ணபுரம் ராமலிங்கே சவுண்டேஸ்வரி அம்மன் கோவிலில், 59 ம்ஆண்டு நவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது.

வழக்கமான கொலு வழிபாட்டுடன், கோவில்களில் பல்வேறு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகளும் பல கோவில்களில் நடந்து வருகிறது.

Advertisement