இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஸ்பெஷல் ஒலிம்பிக் பாட்மின்டனில்

கோலாலம்பூர்: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த, 80 பேர் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சான்வி சர்மா தங்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சான்வி சர்மா, சுஜிதா சுகுமாறன் ஜோடி வெள்ளி கைப்பற்றியது.
ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அங்கித் தலால் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கித் தலால், அமல் பிஜு ஜோடி வெள்ளி வென்றது.
ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை: அமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு
-
பயிர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மன்றாடியது: ஐநாவில் பாக்., பொய்யை உடைத்தது இந்தியா!
-
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
-
அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
Advertisement
Advertisement