திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை: அமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு

24


சென்னை: ''திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை'' என வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.


சென்னையில் நிருபர்கள் அண்ணாமலை, டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இந்த கேள்வி ரொம்ப, நீண்ட நெடிய கேள்வி. ஒரு 4 மாதங்களாக தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இந்த கேள்வியை தான் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள்.

ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்ல விஷயம் தானே. சந்திப்பதால் நல்ல முடிவுகள் வந்து சேரும். எங்கள் கூட்டணிக்கு அனைவரையும் வரவேற்க தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் நானும் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களை மதிக்காத திமுக



வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை. திமுகவோடு கூட்டணியில் இருந்த கட்சி சார்ந்த தலைவர் தான் பிரதமர் மோடியின் தாயாரை விமர்சித்தார்.



அப்போது கூட திமுக தலைவர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. அவர்கள் வடக்கு மற்றும் தெற்கைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

@block_P@

பேசியது என்ன?

''தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், மற்ற மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண்களை மனிதர்களாக கூட கருதாமல் இருந்துள்ளனர். இன்றைக்கும் கூட வட இந்தியாவில் அதே நிலை நீடிக்கிறது'' என திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத் தக்கது. block_P

Advertisement