உலக விளையாட்டு செய்திகள்

ஈரான் 'சாம்பியன்'
அம்மான்: ஜோர்டானில் நடந்த ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) பைனலில் ஈரான், தென் கொரியா அணிகள் மோதின. இதில் ஈரான் 28-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பை வென்றது. கத்தார் அணி 33-26 என, பஹ்ரைனை வீழ்த்தி 3வது இடம் பிடித்தது.


பலே பல்கேரியா
பசே சிட்டி: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பல்கேரிய அணி 3-2 (21-25, 19-25, 25-17, 25-22, 15-13) என, அமெரிக்காவை வீழ்த்தியது. அரையிறுதியில் (செப். 27) செக்குடியரசு - பல்கேரியா, போலந்து - இத்தாலி அணிகள் விளையாடுகின்றன.


அரையிறுதியில் நியூசிலாந்து
செரம்பன்: மலேசியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) ஆசிய கோப்பை கூடைப்பந்து ('டிவிசன்-ஏ') காலிறுதியில் சீனதைபே, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 74-70 என வெற்றி பெற்றது. அரையிறுதியில் (செப். 27) நியூசிலாந்து, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.


பாவோலினி வெற்றி
பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவோலினி 6-1, 6-3 என லாட்வியாவின் அனஸ்டாசிஜா செவஸ்டோவாவை தோற்கடித்தார். அமெரிக்காவின் அனிசிமோவா 6-1, 6-3 என, பிரிட்டனின் கேட்டி பவுல்டரை வென்றார்.


எக்ஸ்டிராஸ்

* கான்பெராவில் நடந்த ஜூனியர் பெண்கள் ஹாக்கி முதல் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

* சென்னையில், வரும் அக். 1-7ல் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பி.எப்.ஐ.,) கோப்பை முதல் சீசன் நடக்கவுள்ளது.


* குளேபல் செஸ் லீக் 3வது சீசனில் (டிச. 13-24, மும்பை) இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, அலாஸ்கன் நைட்ஸ் அணிக்காக விளையாடுகின்றனர். கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இடம் பெற்றுள்ளார்.

* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் இன்று துவங்குகிறது. இதில், ஒடிசா ஒட்டப்பந்தய (100, 200 மீ.,) வீரர் அனிமேஷ் பங்கேற்கவில்லை. ஆசிய விளையாட்டுக்கான (2026) 4x100 மீ., இந்திய உத்தேச அணி தேர்வு செய்யப்படும்.

Advertisement