கிரிக்கெட் ஐ.பி.சி.சி., அணி அசத்தல்

சென்னை:தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.

நேற்று தரமணியில் நடந்த போட்டியில், ஐ.பி.சி.சி., அணி, இந்தியன் வங்கி அணியை எதிர்த்து மோதியது.

இதில், டாஸ் வென்ற ஐ.பி.சி.சி., அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில், 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 283 ரன் குவித்தது.

பின் களம் இறங்கிய இந்தியன் வங்கி அணி, 39.2 ஓவர்களில், 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், ஐ.பி.சி.சி., அணி 111 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement