மகளிர் கல்லுாரியில் நவராத்திரி கொலு

காரைக்குடி: அமராவதிப்புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, சாரதா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சாரதா சேவாஸ்ரமம் சார்பில் நவராத்திரி கொலு விழா நடந்தது. சாரதா தேவி கோயிலில் நடந்து வரும் விழாவிற்கு சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் ராமகிருஷ்ண பிரியா அம்பா முன்னிலை வகித்தனர்.

நேற்று நடந்த நிகழ்வில் தேவகோட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி குழு உறுப்பினர் இலக்கியமேகம், சீனிவாசன், காரைக்குடி மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சிலம்பு தேவி பேசினர்.

முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement