ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்

முனிக்: பேயர்ன் முனிக் அணிக்காக 100வது கோல் அடித்த ஹாரி கேன், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.
ஜெர்மனியில், 'பன்டெஸ்லிகா' கால்பந்து 63வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பேயர்ன் முனிக் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் பிரெமன் அணியை வீழ்த்தியது. பேயர்ன் முனிக் அணிக்கு, இங்கிலாந்தின் ஹாரி கேன் 2 கோல் அடித்து கைகொடுத்தார்.
இது, பேயர்ன் முனிக் அணிக்காக ஹாரி கேன் அடித்த 100வது கோல் ஆனது. கடந்த 2023ல் பேயர்ன் முனிக் அணியில் இணைந்த இவர், 104 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இந்த நுாற்றாண்டில், ஒரு கிளப் அணிக்காக குறைந்த போட்டியில் 100 கோல் அடித்த வீரர்கள் வரிசையில், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட், 2011), நார்வேயின் எர்லிங் ஹாலந்து (மான்செஸ்டர் சிட்டி, 2024) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்தார். ரொனால்டோ, ஹாலந்து தலா 105 போட்டியில் இந்த இலக்கை அடைந்தனர்.
மேலும்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்
-
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி