பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சிவகாசி: சிவகாசி பசுமை மன்றம், மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் செயலாக்கம் நிகழ்வாக சிறுகுளம் கண்மாயில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன.
மெப்கோ பொறியியல் கல்லுாரி, அஞ்சாக் கலைக் கல்லுாரி, ஏ.ஏ.ஏ., கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 130 பேர், சிவகாசி மாநகராட்சி பணியாளர்கள் 40 பேர், பசுமை மன்றத்தினர் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார்.
840 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் ஆகியவை அகற்றப்பட்டன. மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன், பொறியாளர் ராமலிங்கம், சுகாதார துறையினர். கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர்.
பசுமை மன்ற நிர்வாகி பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக சிவகாசி மாநகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பொருட்கள் மீட்பு மற்றும் மறுசுழற்சி மையத்தில் பிரித்து, மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை பசுமை மன்றம் ஆராய்ந்து வருகிறது, என்றார்.
மேலும்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்
-
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி