அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம்

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவம் விழா நடைபெற்று வருகிறது.

விழா கடந்த, 23ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் ரங்கநாயகி தாயாருக்கு, நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

பின்பு பட்டுடுத்தி உற்சவர் தாயார் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ, மேள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் வலம் வந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Advertisement