காசிமேடில் மீன் விலை சரிவு

காசிமேடு:காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கரை திரும்பின; மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது.

அதேநேரம், புரட்டாசி மாதத்தில் அசைவம் உட்கொள்வதை பெரும்பாலானோர் தவிர்ப்பதால், மீன் வாங்க மக்கள் கூட்டமின்றி, சந்தை வெறிச்சோடியிருந்தது.

இதனால், வஞ்சிரம், சீலா, சங்கரா, இறால், கடம்பா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை குறைந்திருந்தது.

Advertisement