உலக கோப்பை: சாதிக்குமா இந்தியா

கவுகாத்தி: சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையில் இந்திய பெண்கள் அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.


லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், நவ. 2ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.
இந்திய அணி, தனது முதல் போட்டியில் (இடம்: கவுகாத்தி) இன்று இலங்கையை சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 5, கொழும்பு), தென் ஆப்ரிக்கா (அக். 9, விசாகப்பட்டனம்), ஆஸ்திரேலியா (அக். 12, விசாகப்பட்டனம்), இங்கிலாந்து (அக். 19, இந்துார்), நியூசிலாந்து (அக். 23, நவி மும்பை), வங்கதேசத்தை (அக். 26, நவி மும்பை) எதிர்கொள்கிறது.


சொந்த மண் சாதகம்: உலகின் 'நம்பர்-3' இந்திய அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகம்.


ஸ்மிருதி பலம்: சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 சதம் விளாசிய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா (சராசரி 66.28, 'ஸ்டிரைக் ரேட்' 115.85) நல்ல 'பார்மில்' இருப்பது பலம். இவருக்கு பிரதிகா ராவல் கைகொடுத்தால் நல்ல துவக்கம் கிடைக்கும்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பெறலாம். பவுலிங்கில் ரேணுகா, கிராந்தி, அருந்ததி, அமன்ஜோத் கவுர் அசத்தினால் சுலப வெற்றி பெறலாம்.



@quote@

பரிசு எவ்வளவு


இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 123 கோடி. இது, கடந்த 2022ல் வழங்கப்பட்டதை விட 4 மடங்கு அதிகம். இதில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 40 கோடி பரிசு வழங்கப்படும். பைனல் வரை சென்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 கோடி பரிசாக கிடைக்கும். quote

Advertisement