ஆசியா...வல்லரசு இந்தியா: பாகிஸ்தானுக்கு 3 முறை 'அடி'

துபாய்: 'டி-20' அரங்கில் உலக சாம்பியனான இந்திய அணி, ஆசிய அரங்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசிய கோப்பையை 9வது முறையாக வென்றது. பைனல் உட்பட 3 போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு சம்மட்டி 'அடி' கொடுத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி-20' தொடர் நடந்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தான் இடம் பெற்றதால் அரசியல் தலை துாக்கியது. சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் அந்நாட்டு பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தி, இந்தியா பதிலடி கொடுத்தது.
அசத்தல் ஆட்டம்: இந்த பதட்டமான சூழலில் இரு அணிகளும் மோதின. கேப்டன்கள் கைகுலுக்கி கொள்ளாதது, பாகிஸ்தான் நிர்வாகியிடம் இருந்து ஆசிய கோப்பையை பெறாமல் இந்தியா புறக்கணித்தது போன்ற சம்பவங்கள் நடந்தன. இருப்பினும் களத்தில் இந்திய கொடியே உயரே பறந்தது. 'டி-20' அரங்கில் உலகின் 'நம்பர்-1' அணி என்பதற்கு ஏற்ப, ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக ஆடியது.
நமது பேட்டர்கள், பவுலர்கள் பாகிஸ்தானை புரட்டி எடுத்தனர். லீக் சுற்றில் அபிஷேக் சர்மா (31), கேப்டன் சூர்யகுமார் (47) விளாச, 25 பந்து மீதமிருக்க, பாகிஸ்தானை சுலபமாக வென்றது. அடுத்து நடந்த 'சூப்பர்-4' சுற்றில் அபிஷேக் (74), சுப்மன் கில் (47) அசத்த, மீண்டும் வெற்றி பெற்றது.
ஹீரோ திலக் வர்மா: நேற்று முன் தினம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பைனலில் குல்தீப் யாதவ் 'சுழல்' ஜாலம் நிகழ்த்தினார். இதனால், 113/1 என இருந்த பாகிஸ்தான் எஞ்சிய 9 விக்கெட்டுகளை 33 ரன்னுக்கு இழந்தது. பின் திலக் வர்மா 69 ரன் விளாச, இந்திய அணி ஆசிய கோப்பையை எளிதாக கைப்பற்றியது.
இருவர் காரணம்: இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என வென்றது. தொடரில் நுாறு சதவீத வெற்றியை பதிவு செய்தது. இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய அணிகளை வீழ்த்தி, ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதற்கு அபிஷேக் சர்மாவின் அதிரடி பேட்டிங் (7 போட்டி, 314 ரன், ஸ்டிரைக் ரேட் 200.00), குல்தீப் யாதவின் (7 போட்டி, 17 விக்கெட்) மந்திர பந்துவீச்சு முக்கிய காரணம். இருவரையும் பாகிஸ்தான் அணியினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. திலக் வர்மாவும் (7 போட்டி, 213 ரன்) கைகொடுத்தார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், பும்ராவும் அசத்தினர்.
இந்திய முன்னாள் 'ஸ்பின்னர்' ஹர்பஜன் சிங் கூறுகையில்,''கேப்டன் சூர்யகுமார் சொன்னது போல நமக்கு சவால் தரும் அணியாக பாகிஸ்தானை கருத முடியாது. சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்தியா தான் வென்றுள்ளது. இந்தியாவுக்கு நிகராக எந்த அணியும் தற்போது கிடையாது,''என்றார்.
3-0
ஆசிய கோப்பை தொடரில் இம்முறை இந்தியா, பாகிஸ்தானை மூன்று முறை வீழ்த்தியது.
1) லீக் சுற்று: துபாய், செப். 14
ரிசல்ட்: இந்தியா வெற்றி (7 விக்.,)
பாகிஸ்தான்: 127/9 (20 ஓவர்)
இந்தியா: 131/3 (15.5 ஓவர்)
ஆட்ட நாயகன்: குல்தீப் (3 விக்.,)
2) 'சூப்பர்-4' சுற்று: துபாய், செப். 21
ரிசல்ட்: இந்தியா வெற்றி (6 விக்.,)
பாகிஸ்தான்: 171/5 (20 ஓவர்,)
இந்தியா: 174/4 (18.5 ஓவர்)
ஆட்ட நாயகன்: அபிஷேக் சர்மா (74 ரன்)
3) பைனல்: துபாய், செப். 28
ரிசல்ட்: இந்தியா வெற்றி (5 விக்.,)
பாகிஸ்தான்: 146/10 (19.1 ஓவர், குல்தீப்- 4 விக்.,)
இந்தியா: 150/5 (19.4 ஓவர்)
ஆட்ட நாயகன்: திலக் வர்மா (69* ரன்)
17-0
பல அணிகள் பங்கேற்கும் 'டி-20' தொடர்களில், இந்திய அணி 17 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. ஆசிய விளையாட்டில் (2023) 2, 'டி-20' உலக கோப்பையில் (2024) 8, ஆசிய கோப்பையில் (2025) 7 என 17 போட்டிகளில் வெற்றி பெற்றது.
9-0
சர்வதேச 'டி-20' வரலாற்றில், பாகிஸ்தானுக்கு எதிராக 'சேஸ்' செய்த 9 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.
மேலும்
-
காஞ்சியில் செயல்படும் மின்வாரிய அலுவலகம் செங்கைக்கு மாற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மண் லாரிகளால் மருதேரி சாலை சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
-
பஸ் முனைய இருப்பறையில் தீ கிளாம்பாக்கத்தில் பரபரப்பு
-
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
-
காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை
-
சாய் தபோவனத்தில் வரும் 2ல் குருபூஜை