தோட்டத்தில் கவிழ்ந்தது கார் சென்னை ஐ.டி., ஊழியர் பலி
தலைவாசல்: கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல, 'கூகுள் மேப்' பார்த்து ஓட்டிச் சென்ற கார் விவசாய தோட்டத்தில் கவிழ்ந்ததில், ஐ.டி., ஊழியர் பலியானார்.
ஐ.டி., நிறுவன பணியாளர்களான சென்னை, மீனம்பாக்கத்தை சேர்ந்த ராஜகுரு, 44, கணேஷ்குமார், 40, உட்பட ஏழு பேர், விடுமுறையை கொண்டாட, சென்னையில் இருந்து தலைவாசல் வழியே கொல்லிமலை செல்ல, 'எர்டிகா' காரில் வந்து கொண்டிருந்தனர்.
கணேஷ்குமார், 'கூகுள் மேப்'பை பார்த்தபடி, சாத்தப்பாடி செல்லும் சாலையில் காரை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு சாத்தப்பாடி சாலை வளைவில் திரும்பிய போது, சாலையோர விவசாய தோட்டத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது நண்பர்கள் ஆறு பேரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், கணேஷ்குமார் ஆபத்தான நிலையில் உள்ளார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'சாத்தப்பாடி வழியே கொல்லிமலைக்கு செல்ல வழியில்லை. தலைவாசல், ஆத்துார் வழியே ராசிபுரம் அல்லது தம்மம்பட்டி சென்று செல்லலாம். சாலை வளைவு இருப்பது தெரியாமல் சென்றதால் கார் விபத்துக்குள்ளானது' என்றனர்.
மேலும்
-
கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது
-
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
-
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவன் கொலை திட்டம் தீட்டிய மனைவி உள்பட 3 பேர் கைது
-
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை ஒப்படைத்த மக்கள்
-
வீடு கட்டி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது