தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பெரு-கோபனப்பள்ளி அடுத்த கோட்டூர் கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, 12 அடி நீள மலைப்பாம்பு கடந்த ஒரு மாதமாக, அப்பகுதியி-லுள்ள குடியிருப்புகளில் இருந்த கோழிகளை இரையாக்கிக் கொண்டு தென்னந்தோப்பிலுள்ள புதர்களில் பதுங்கி இருந்தது.
நேற்று காலை அந்த மலைப்பாம்பு ஒரு கோழியை பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. இதை அவ்வழியே சென்ற கிருஷ்ணமூர்த்தி பார்த்து, பர்கூர் தீய-ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்-துள்ளார். நிலைய அலுவலர் பழனி தலை-மையில் வந்த தீயணைப்புத்துறையினர், மலைப்பாம்பை பிடித்து, தொகரப்பள்ளி காப்-புக்காட்டில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது; கரூர் துயரம் பற்றி நிர்மலா சீதாராமன் பேட்டி
-
கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை
-
திருமலை கருட சேவை,திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள்
-
கரூரில் நடந்த துயர சம்பவம்: விசாரிக்க தேஜ கூட்டணி சார்பில் குழு அமைப்பு
-
தமிழகம் முழுவதும் பத்திரவுப்பதிவு இணையதளம் திடீர் முடக்கம்; பொதுமக்கள் அவதி
-
தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; 'அரட்டை' செயலிக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement