திருமலை கருட சேவை,திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள்

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் சிறப்பான கருட சேவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மலையப்ப சுவாமி தங்கக் கருட வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் மாலை, புகழ்பெற்ற லட்சுமி ஹாரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களுடன் சுவாமி எழுந்தருளினார்.“கோவிந்தா.. கோவிந்தா..” என முழங்கிய பக்தர்களின் கோஷத்தால் திருமலை அதிர்ந்தது.
இந்த நிகழ்வை சிறப்பிக்க நாடு முழுதுதிலும் இருந்து பல்வேறு கலைக்குழுவினர் வருகைதந்திருந்தனர் அவர்களது நிகழ்ச்சிகளைக் கண்டு பார்வையாளர் மாடத்தில் இருந்தவர் பெரிதும் மகிழ்ந்தனர்.
சுமார் இரண்டு லட்சம் பேரை அடக்கக் கூடிய கேலரிகளில் 24 மணி நேர அன்னபிரசாதம், குடிநீர், மருத்துவம், எல்இடி திரைகள், பாதுகாப்பு பேண்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சுமார் 4700 போலீசார், 1500 கண்காணிப்புப் பணியாளர்கள், 2000 சேவகர்கள், 500 பிரத்யேக அலுவலர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டனர்.