போச்சம்பள்ளி வாரச்சந்தை; ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்-சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகள், நாட்டு கோழிகளை விற்-பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

கடந்த, 17-ல் புரட்டாசி மாதம் பிறந்ததை அடுத்து, நேற்று முன்தினம் புரட்டாசி, 2வது சனிக்கிழமை முடிந்த நிலையில், அசைவ பிரியர்கள் இறைச்சி மீது ஆர்வம் காட்டவில்லை. புரட்டாசி 3-வது, 4-வது சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதம் முழுவதும், மக்களில் பலர் விரதமிருந்து, பெருமாள் சுவாமியை வணங்குகின்றனர். இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்-தைக்கு விவசாயிகள், வியாபாரிகள், 500க்கும் குறைவான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவைகளை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள், விவசாயிகள், 200க்கு மேற்பட்ட ஆடுகளுடன் திரும்பிச்சென்றனர்.

Advertisement