பள்ளிகளுக்கு மரக்கன்று வழங்கல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா டேனிஷ்மிஷன் துவக்கப் பள்ளியில் நடந்தது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் மோகன் தலைமை தாங்கினார். அரிமா வட்டார தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ராமலிங்கம் மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், பொறுப்பாளர் சேகர், ஆசிரியர் பயிற்றுனர்கள் சுந்தரமூர்த்தி, வசந்தி, கதிர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அண்ணாகிராமம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பலா, நெல்லி, நாவல் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement