நாமக்கல்லில் த.வெ.க., பிரசார கூட்டத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் ஆறுதல்
ஈரோடு, நாமக்கல்லில் கடந்த வாரம் நடந்த, த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், 23, கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்து, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களாக ஐ.சி.யூ.,வில் இருந்த நிலையில் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அவரை சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின் நிருபர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், ''த.வெ.க., கூட்டத்தில் காயமடைந்த சந்தோஷ்குமாருக்கு செயற்கை சுவாதம் வழங்கியதால், நேற்று வரை அவரை பார்க்க முடியவில்லை. தற்போது நலமாக உள்ளதால், அவரை சந்தித்து ஆறுதல் கூறி, அவருக்கான மருத்துவ செலவுகளை நாங்கள் ஏற்பதாக அவரிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் கூறியுள்ளோம்,'' என்றார். அப்போது கலெக்டர் கந்தசாமி
உடனிருந்தார்.
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!