மிரட்டல் - மறியல் எதிரொலியால் வாரச்சந்தைக்கு நேரம் நிர்ணயம்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 52வது வார்டுக்கு உட்பட்ட ஷேக் தாவூத் வீதி உள்ளிட்ட இடங்களில், திங்கட்கிழமைகள் தோறும் வாரச்சந்தை அமைப்பது வழக்கம்.

இதில், 250 சிறு வியாபாரிகள், 200 கடைகளை போட்டு வந்தனர். கடந்த வாரம் சந்தையில் கடை அமைக்க சிலர் மிரட்டியதால் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள், அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோரை சந்தித்து, சிறு வியாபாரிகள் முறையிட்டனர்.

இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று காலை, சிறு வியாபாரிகள் வாரச்சந்தையில் கடை அமைக்கவில்லை. அவர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மதியம், ௩:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை கடை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டது.

Advertisement