தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
தர்மபுரி:தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இன்று, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, நாளை விஜய தசமியை முன்னிட்டு, தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி, 500, கனகாம்பரம், 500, சன்னமல்லி, 550, ஜாதிமல்லி, 300, காக்கடான், 500, பன்னீர் ரோஸ், 150, பட்டன்ரோஸ், 300, சம்பங்கி, 150, சாமந்தி, 80, செண்டுமல்லி, 20 ரூபாய் என விற்பனையானது. நேற்று விலை உயர்ந்து, குண்டுமல்லி, 550, கனகாம்பரம், 500, சன்னமல்லி, 600, ஜாதிமல்லி, 360, காக்கடான், 500, பன்னீர்ரோஸ், 250, பட்டன்ரோஸ், 300, சம்பங்கி, 160, சாமந்தி, 40 முதல், 200 ரூபாய், செண்டுமல்லி, 40 ரூபாய் என, 25 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!