பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

தர்மபுரி:தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு சுற்றுலா வந்த, அரசு பள்ளி மாணவர்களை -தன் அறைக்கு அழைத்து சென்ற, கலெக்டர் சதீஸ், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், 39 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அலுவலக வளாகத்தில் புல்வெளியுடன், சிறிய பூங்கா, 100 அடி உயரத்தில் தேசிய கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த குழிப்பட்டி, அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் ஒரு நாள் சுற்றுலாவாக நேற்று அழைத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்தை சுற்றிபார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த கலெக்டர் சதீஸ், மாணவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து மாணவர்களை, தன் அறைக்கு அழைத்து சென்று, கல்வி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் முக்கியத்துவம், நிர்வகிக்கும் திறன் குறித்து எடுத்து கூறினார். இதனால், சுற்றுலா வந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement