வயிற்று வலி அவதி விவசாயி தற்கொலை

நெல்லிக்குப்பம் : வயிற்று வலியால் அவதியடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா,45; விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement