கரூர் சம்பவம் விசாரணை அதிகாரி மாற்றம்

சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

த.வெ.க., தலைவர் விஜய், இரு தினங்களுக்கு முன், கரூரில் மக்கள் சந்திப்பு எனும் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் விசாரித்து வருகிறது.

காவல் துறை சார்பில், கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.

தற்போது, அவர் மாற்றப்பட்டு, அந்த மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி.,யாக பணிபுரியும் பிரேமானந்தன், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement