தேனியில் தமிழக பாக்சிங் அணித்தேர்வு போட்டி
தேனி; இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு போட்டியில் தமிழக பாக்சிங் அணித்தேர்வு போட்டி தேனியில் அக்., 2 முதல் 5 வரை நடக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியப்பள்ளி விளையாட்டுக்கூட்டமைப்பு (எஸ்.ஜி.எப்.ஐ) செயல்படுகிறது.
இந்த அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணியில் இடம் பெறும் மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்கின்றனர்.
இந்தாண்டு தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிகள் அருணாச்சல பிரதேசத்தில் அக்., 27 ல் துவங்குகிறது.
கல்வித்துறையினர் கூறுகையில், 'இப்போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக பாக்சிங் அணித்தேர்வு தேனி முத்துத்தேவன்பட்டி தனியார் பள்ளியில் அக்., 2 முதல் அக்., 5 வரை நடக்கிறது.
இதில் தேர்வாகும் வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்பார்கள். போட்டிகள் மாணவர்களுக்கு 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவிலும், மாணவிகளுக்கு 17,19 வயதிற்குட்பட்ட பிரிவிலும் நடக்கிறது,' என்றனர்.
மேலும்
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரிப்பு: அன்புமணி
-
இளம் இந்தியா அபார பந்துவீச்சு: 243 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா
-
இஷா-ஹிமான்ஷு ஜோடி 'தங்கம்': உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
-
ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் விலகல்: நியூசிலாந்து 'டி-20' தொடரில் இருந்து
-
சார்ஜா அணியில் தினேஷ் கார்த்திக்
-
அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்