அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்

புதுடில்லி: அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம் என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்து உள்ளார்.
டில்லியில் ராணுவ நர்சிங் சேவையின் 100வது நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அனில் சவுகான் பேசியதாவது: கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் உயிரியல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்தையும் திறம்பட எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் உலக நாடுகள் கடும் இன்னல்களை சந்தித்து தற்போது மீண்டு வந்துள்ளது.
பின்வாங்காது
அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவைத் தளரவிடாமல் இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அணு ஆயுத அச்சுறுத்தலால் இந்தியா பின்வாங்காது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
ராணுவ நர்சிங் சேவை தேசத்திற்கு 100 ஆண்டுகால தன்னலமற்ற சேவையை நிறைவு செய்துள்ளது. மோதல்களின் முன்னணியில் இருந்தாலும், தற்காலிக மருத்துவமனைகளில் இருந்தாலும், கடல்களில் கப்பல்களில் இருந்தாலும் அல்லது மனிதாபிமானப் பணிகளில் இருந்தாலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளனர்.
இதயத்துடிப்பு
செவிலியர்கள் சுகாதாரத் துறையின் இதயத்துடிப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் சிகிச்சையுடன் நம்பிக்கை மற்றும் ஆறுதலை வழங்குகிறார்கள். இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.
மேலும்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்; தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன்
-
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி