சார்ஜா அணியில் தினேஷ் கார்த்திக்

சார்ஜா: சர்வதேச லீக் தொடருக்கான சார்ஜா அணியில் தினேஷ் கார்த்திக் இணைந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில், அடுத்த ஆண்டு (ஜன. 10 - பிப். 11) சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள சார்ஜா வாரியர்ஸ் அணியில், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் 40, ஒப்பந்தமானார். இவர், இலங்கையின் குசல் மெண்டிசிற்கு பதிலாக தேர்வானார். இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டுமினி உள்ளார்.
ஏற்கனவே பிரிமியர் லீக் தொடரில் டில்லி (2008-10, 2014), பஞ்சாப் (2011), மும்பை (2012-13), பெங்களூரு (2015, 2022-24), குஜராத் (2016-17) அணிகளுக்காக விளையாடிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த 'எஸ்.ஏ.20' தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக 11 போட்டியில் (130 ரன்) பங்கேற்றார்.
இதுவரை 412 'டி-20' போட்டிகளில் (7437 ரன், 35 அரைசதம், 'ஸ்டிரைக் ரேட்' 136.66) விளையாடிய தினேஷ் கார்த்திக், இந்தியாவுக்காக 60 'டி-20' போட்டியில் (686 ரன், 'ஸ்டிரைக் ரேட்' 142.61) விளையாடினார்.
தினேஷ் கார்த்திக் கூறுகையில், ''சர்வதேச லீக் தொடருக்கான சார்ஜா அணியில் ஒப்பந்தமானதில் மகிழ்ச்சி. இந்த அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். சார்ஜாவில் விளையாடுவது மிகவும் பிடிக்கும்,'' என்றார்.
மேலும்
-
பிலிப்பைன்சுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் ஆறுதல்
-
ஆப்கன் முழுதும் இணையசேவை துண்டிப்பு; அரசு மற்றும் வங்கிசேவைகள் முடக்கம்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் எத்திராஜ் அணி வெற்றி
-
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி
-
பெண்கள் 'டி - 20' கிரிக்கெட் குருநானக் கல்லுாரி வெற்றி