இளம் இந்தியா அபார பந்துவீச்சு: 243 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

பிரிஸ்பேன்: 'யூத்' டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்னுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்டில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் முதல் டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் டர்னர் (9), அலெக்ஸ் லீ யங் (18) ஏமாற்றினர். கேப்டன் வில் மலாஜ்சுக் (21), சைமன் பட்ஜ் (15), டாம் ஹோகன் (8), ஜான் ஜேம்ஸ் (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஸ்டீவன் ஹோகன் (92) அரைசதம் கடந்தார். ஜெட் ஹோலிக் (38) ஓரளவு கைகொடுத்தார்.
தமிழக வேகப்பந்துவீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் பந்தில் ஆர்யன் சர்மா (9), டாம் பேடிங்டன் (0) அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஹைடன் ஷில்லர் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் தீபேஷ் 5, கிஷான் குமார் 3 விக்கெட் சாய்த்தனர்.
மேலும்
-
ஜி.டி.பி., 6.50% வளர்ச்சி பெறும் ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
-
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது
-
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்
-
வருங்கால தலைவராக உருவாக்குவதில் ஜே.எஸ்., பள்ளி முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனர் செந்தில்குமார் பெருமிதம்
-
ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டம் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிப்பு
-
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது