சாத்தியமற்ற வாக்குறுதி!

1

ஜம்மு - -காஷ்மீர், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து, மக்களை தவறாக பா.ஜ., அரசுவழிநடத்தியுள்ளது. எல்லையோர பகுதியில் கூடுதல் பாதுகாப்பு அவசியம்.


- ஒமர் அப்துல்லா,
ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

ஆபத்தான மனநிலை!



காங்., தலைவர் ராகுல், மார்பில் சுடப்படுவார் என, 'டிவி' விவாதத்தில் பா.ஜ., செய்தித்தொடர்பாளர் பகிரங்கமாக கூறியது, அக்கட்சியின் ஆபத்தான மனநிலையை பிரதிபலிக்கிறது. ராகுல் செல்லும் இடங்களை பொதுவெளியில் பகிர்வது பாதுகாப்பு மீறல் இல்லையா?

-அசோக் கெலாட்,
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

இந்தியர்களின் நம்பிக்கை!



சுதேசி என்ற கருத்து இந்தியாவிற்கு புதிதல்ல; அது சுதந்திரப் போராட்டத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியது. இது, பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுயசார்பு இந்தியா என்பது மத்திய அரசின் கொள்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கை.

-பூபேந்திர சிங் சவுத்ரி,
உ.பி., தலைவர், பா.ஜ.,

Advertisement