வருங்கால தலைவராக உருவாக்குவதில் ஜே.எஸ்., பள்ளி முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனர் செந்தில்குமார் பெருமிதம்

ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவெடுப்பார்கள் என பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி கடந்த 5 கல்வி ஆண்டுகளாக பெற்றோர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதப்படி வகுப்புகள் நடத்தப்படுவதால், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காக மொழி, அறிவியல், கணினி மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள், ஸ்மார்ட் பலகைகள் மூலமும், அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் கற்பிக்கப்படுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், மேம்பாடு கருவிகளுடன் அதிநவீன ஆய்வகம், பன்முக மொழித்திறன்களை மேம்படுத்த 'ஆடியோ விஷ்வல் லேங்குவேஜ் மினி தியேட்டர்' உள்ளது.
6ம் வகுப்பில் இருந்து ஜே.இ.இ., நீட் மற்றும் ஜே.ஐ.ஐ.டி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தனித்திறனை மேம்படுத்த பரதநாட்டியம், நடனம், இசை வகுப்புகள், மேற்கத்திய நடனம், வில்வித்தை, சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே, யோகா பயிற்சி, கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மாணவர்களை களப்பயணம் அழைத்துச் செல்கின்றோம்.
கல்வியில், பின்தங்கிய மாணவர்களுக்காக வாரம் தோறும் சனிக்கிழமை மாற்று வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாதந்தோறும் உடல் ஆரோக்கிய வகுப்புகளும், கண் மற்றும் பல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பண்பாட்டு மரபு, இலக்கிய கல்வித்திறமை, நுண்கலைகள் என குழுக்கள் அமைத்து மாணவர்களை நல்வழிபடுத்துகிறோம்.மாணவர்களை வருங்கால தலைவர்களாக உருவாக்கி தருவதில் ஜே.எஸ்., பள்ளி முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு பள்ளியின் செந்தில்குமார் தெரிவித்தார்.
மேலும்
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
-
தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
-
விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்
-
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் பாதையை பின்பற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை
-
நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்