விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்

விழுப்புரம்: விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் , சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உடனே தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காரில் பயணித்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த சம்சுதின், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
மேலும்
-
ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
-
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச 'அரட்டை' செயலி
-
தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!
-
காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்
-
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!