கார்டுதாரர்களுக்கு 10ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க உத்தரவு

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதத்திற்கான உணவு பொருட்களை, வரும், 10ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை, வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால், ரேஷனில் பச்சரிசி, பாமாயிலுக்கு தேவை அதிகம் இருக்கும். அத்துடன் பலர், முன்கூட்டியே சொந்த ஊர் களுக்கு செல்வர்.

எனவே, இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு, வரும், 10ம் தேதிக்குள் ஒரே தவணையில் வினியோகம் செய்ய வேண்டும் என, கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் பணியில், நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.

Advertisement