போலி தங்கம் கொடுத்து மோசடி மேற்கு வங்க ஆசாமி உட்பட 2 பேர் கைது

புதுச்சேரி :புதுச்சேரி, பாரதி வீதியை சேர்ந்தவர் தீபக்தாஸ்,50; நகை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம், சேலம் சந்திப் ஜனா என்பவர், நகை வியாபாரம் செய்வதாக அறிமுகமானார். பின், அவரிடம் 60 கிராம் தங்க கட்டியை கொடுத்து நகைகளை வாங்கிச் சென்றார்.

அவ்வாறு, கடந்த ஜூலை 19ம் தேதி இரவு தீபக்தாசிடம் 1.80 கிலோ தங்க கட்டிகளை கொடுத்து, ரூ.80 லட்சம் மதிப்புள் ள 880 கிராம நகைகளை வாங்கிச் சென்றார். அவற்றை சோதனை செய்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட செம்பு கட்டிகள் என, தெரிய வந்தது.

தீபக்தாஸ் புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், நாமக்கல் மாவட்டம், மேட்டுகடையை சேர்ந்த தீபன்,28; என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜூலிபர் ஹூசைன்,43; கேரளாவை சேர்ந்த முனிர்,40; நாமக்கல் சஞ்சிவ்,20; சேலம் கவுதம், 33; ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. சஞ்சிவ், கவுதம் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான ஜூலிபர் ஹூசைன், முனிர் ஆகியோரை கடந்த 17ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். 700 கிராம் நகைகள் மற்றும் கார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement