பன்னாட்டு நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சாதனை புரியும் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லுாரி

கல்லுாரி தாளாளர் ஆர்.சோலைசாமி கூறியதாவது
சிவகாசி அருகே செவல்பட்டியில் 1999 ல் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லுாரி தொடங்கப்பட்டது. இந்த கல்லுாரி டெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அங்கீகாரம் பெற்றது.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
தேசிய அங்கீகார வாரியம், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலில் ஏ-பிளஸ் கிரேடு பெற்றுள்ளது.
மேலும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழும் பெற்றுள்ளது. பல்கலைக் குழுவின் 1956-ன் சட்டப்படி 2 எப் மற்றும் 12 பி அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
நமது கல்லுாரியில் ஆராய்ச்சி கூடங்களும், சிறந்த ஆய்வகங்களும் உள்ளது. நவீன வகுப்பறைகள், தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆய்வகங்கள், வைபை இன்டர்நெட் வசதியுடன் உள்ளது. இங்குள்ள நுாலகத்தில் 50 ஆயிரம் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் உள்ளது. போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நுாலகம் முக்கிய வழிகாட்டியாக உள்ளது.
பல்வேறு பாடப்பிரிவுகளை பயிற்றுவிக்க முனைவர் பட்டம் பெற்ற தலைசிறந்த பேராசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழக அரசின் ICT Academy சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தியாகராஜனிடமிருந்து எஜுகேஷன் சேஞ்ச் மேக்கர் விருதை கல்லுாரி தாளாளர் சோலைசாமி பெற்றார். படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களான டி.சி.எஸ்., சி.டி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல்., சோகோ, ஸ்மார்ட்டிவி. எச்.பி. ஆகியவற்றில் பணியாற்றி வருகிறார்கள். 2025 ல் பணிநியமன விழாவில் Wipro Ltd. நிறுவனத்தின் தேசிய ஆட்சேர்ப்பு தலைவர் ராதிகா ரவி 1296 நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இக்கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினியரீங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினியரீங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினியரீங், சிவில் என்ஜினியரீங், பயோ மெடிக்கல் என்ஜினியரீங், பி.டெக் பயோடெக்னாலஜி, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் உள்ளன. முதுகலை பாடப்பிரிவுகளில் எம்.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினியரீங், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினியரீங் டிசைன், ஸ்டிச்சரல் மற்றும் எம்.பி.ஏ ஆகிய படிப்புகள் உள்ளன.
அதே போல ஆராய்ச்சி படிப்புகான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக், சிவில், இயற்பியல், பயோடெக் ஆகிய பிரிவுகளும் உள்ளன.
இந்த கல்வியாண்டில் Lavendel Consulting Ltd. நிறுவனத்தில் ஆண்டிற்க்கு ரூ.12 லட்சம் சம்பளத்தில் பணிநியமன ஆணைகளை பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிநியமன ஆணைகளை பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.ரூ.4 கோடியில் நவீன ஆய்வு மையங்கள் உள்ளது.நமது கல்லுாரியில் படித்த மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளில் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!