ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் 308 ஆக அதிகரிக்கும் ஓட்டுச்சாவடிகள்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 283 லிருந்து 308 ஆக உயர்த்தும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2025 ஜன. 6 தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் 1,17, 050 ஆண் வாக்காளர்கள், 1 , 23 , 310 பெண் வாக்காளர்கள், 42 மூன்றாம் பாலினம் உட்பட 2, 40, 402 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக தற்போது 283 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் 1200க்கும் மேற்பட்ட ஓட்டுகள் கொண்டதாக உள்ளது.
இந்நிலையில் ஓட்டுப்பதிவு சதவீத எண்ணிக்கை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி 1300க்கு மேற்பட்ட ஓட்டுகள் உள்ள சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது.
இதன்படி இத்தொகுதியில் 25 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து 308 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மிக குறைந்த அளவில் மலைவாழ் மக்கள் வசிக்கும் செண்பகத்தோப்பு, தாணிப்பாறை ராம்நகர் பகுதிகளிலும் ஓட்டு சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடங்களை கண்டறிந்து தயார் செய்யும் பணியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு