புதுச்சேரிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி., க்கு புதுச்சேரி தி.மு.க., செயற்குழு உறுப்பினர் தலைமையில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதுச்சேரி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார்,காந்தி , தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவீந்திரன், இளம்பரிதி, தொகுதி செயலாளர் திராவிடமணி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement