கரூர் சம்பவத்துக்கு த.வெ.க.,வே பொறுப்பு

3

@quote@ பொது வாழ்க்கைக்கு வருபவர்கள், தங்களுக்கு வருகிற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். த.வெ.க.,வில் தொண்டர் படை அமைக்க வேண்டும்; 'பவுன்சர்'களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இனிமேலாவது, விஜய் அதை செய்ய வேண்டும். கரூரில் விஜய் வந்தபோது, நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் காரணமாக, பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு த.வெ.க.,வினர் தான். 'புரட்சி வெடிக்க வேண்டும்' என, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபர் ஆணையம் குறித்து பேச, பழனிசாமிக்கு தகுதி கிடையாது.

- வைகோ, பொது செயலர் ம.தி.மு.க.,quote

Advertisement