தொழில் மலர் கட்டுரை- டிபிகே

திருப்பரங்குன்றம் பாண்டியன்நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம். ஹைடெக் அராய் நிறுவன பொது மேலாளர். சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலரும்கூட.
பொதுச் சேவையில் ஈடுபாடுள்ள இவர் வருமானத்தில் ஒரு பகுதியை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக வழங்கி வருகிறார். பள்ளிகளுக்கு டேபிள், சேர்கள், ஏழை மாணவருக்கு இலவச சீருடை, உதவித்தொகை வழங்குகிறார்.
வறுமையால் படிப்பை நிறுத்தும் மாணவர்களை தேடிப்பிடித்து கல்வி உதவி செய்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை, உபகரணங்கள் வழங்குகிறார்.
இவரது சேவைக்காக தமிழக கவர்னராக இருந்த ரோசையாவிடம், பசுமை இந்தியா விருது, பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியிடம் சிறந்த சமூக சேவை விருது, பல்வேறு அமைப்புகளில் இருந்தும் ஏராளமான சமூக சேவை, ஆன்மிக செம்மல் விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவர் கூறியதாவது: முருகனின் முதற்படை வீடு எனும் சிறப்பு பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அறங்காவலர் குழு ஒத்துழைப்புடன் சமீபத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தினோம். தற்போது இரண்டு கல்லுாரி மாணவிகள், ஒரு சட்டக் கல்லுாரி மாணவி, பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் படிக்கும் 4 மாணவர்களின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுள்ளேன்.
சிறு வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள எனக்கு ஹைடெக் அராய் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கேரா ரோல் மாடல் ஆக உள்ளார். அவர் எனது வாழ்க்கை வழிகாட்டி. பொதுச் சேவையில் ஈடுபட காரணமாக இருந்து ஊக்கப்படுத்தி வருகிறார். நான் தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட அவரது ஒத்துழைப்பும், யோசனையும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. வசதியற்றவர்கள் கல்வி உதவித் தொகைகள், மருத்துவ உதவிகளுக்கு 98431 16617ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.