சொற்பொழிவு

திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய ஓய்வூதியர்கள் சங்க அறக்கட்டளை, கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சொற்பொழிவு நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் காயத்ரி தேவி வரவேற்றார். பேராசிரியர் மல்லிகா அறிமுக உரையாற்றினார்.

காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். முனைவர் பட்ட ஆய்வாளர் சுரேஷ் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியர்கள் தேவிபூமா, திருஞானசம்பந்தன், முனியசாமி ஒருங்கிணைத்தனர். பட்ட ஆய்வாளர் விஜயா நன்றி கூறினார்.

கதர் போர்டு கண்காணிப்பாளர் எம்பெருமாள் ராட்டையில் நுால் நுாற்றார்.

Advertisement