தொடர் விடுமுறை எதிரொலி; அரசு பஸ்களில் 6.91 லட்சம் பேர் பயணம்

சென்னை: தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழக அரசு பஸ்களில் 6.91 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் கூறியுள்ளதாவது;
தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையை (தொடர் விடுமுறையை) முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (30.09.2025) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி மற்றும் அதிகாலை 02.00 மணிவரை சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்கள் உடன் கூடுதலாக 1,100 பஸ்களும் இயக்கப்பட்டன.
கடந்த 26.09.2025 முதல் 30.09.2025 வரை, தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 2,843 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 13,303 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் மொத்தம் 6,91,757 பயணிகள் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
3வது நாளாக தொடரும் பாக்., அரசுக்கு எதிரான போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் பலி
-
சர் கிரீக் பகுதியில் ராணுவ கட்டமைப்பை அதிகரிக்கும் பாக்: எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்!
-
இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
சுங்கத்துறையினர் மீது லஞ்சப்புகார் கூறி சேவையை நிறுத்திய சரக்கு நிறுவனம்; நடந்தது என்ன?
-
ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
-
தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச 'அரட்டை' செயலி