ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
@1brவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில் இன்று (அக் 01) வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை பாதிக்கும்.
இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
880 டன் தங்கம்
மேலும் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசிவ் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்திய ரிசர்வ் வங்கியிடம் 880 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மதிப்பு 4.32 லட்சம் கோடி ரூபாய். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
01 அக்,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement