ரூ. 40 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்க பூஜை

மேட்டூர்,மேச்சேரி ஒன்றியத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு, மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் பூமி பூஜை செய்தார்.


மேட்டூர் சட்டசபை தொகுதி, மேச்சேரி டவுன்பஞ்., திமிரிக்கோட்டை அருகிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு புது பைப்லைன் அமைத்தல், மாரியம்மன் கோயில் அருகே கான்கிரீட் சாலை அமைத்தல், சீராமணியூர் அரசு துவக்கப்பள்ளி அருகில் போர்வெல், குடிநீர் தொட்டி அமைத்தல், பத்ரகாளியம்மன் கோயில் அருகே, சேலம் பிரதான சாலை அருகே கான்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகள் துவங்க உள்ளது.

மேச்சேரி, சந்திரம்மாகடை கடை பஸ் நிறுத்தம் அருகே புதிய பைப்லைன் அமைத்தல், ஓலைப்பட்டி ஊராட்சி, காமனேயில் புதிய கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகிய, 6 பணிகளை மேட்டூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவங்குகிறது. அதற்கான பூமிபூஜை நேற்று மதியம் மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ம.க., மாநில துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், டவுன்பஞ்., முன்னாள் தலைவர் குமார், நகர செயலர் கோபாலன், மாவட்ட துணை செயலர் கோவிந்தன் மற்றும் டவுன்பஞ்., ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement