பீரோவை உடைத்து 10 பவுன் ரூ.80 ஆயிரம் திருட்டு

சேலம், வாழப்பாடி அடுத்த அனுப்பூர் கிராமம், மேலக்காட்டை சேர்ந்தவர் புஷ்பா, 55. தனியாக வசித்து வரும் இவர், கட்டட வேலை செய்து வருகிறார். கடந்த 22ல், வீட்டை பூட்டி விட்டு, மல்லசமுத்திரத்திற்கு சென்று தங்கி வேலை பார்த்தவர், அங்கிருந்து 27ல், மூத்த மகள் கனகா வீட்டுக்கு சென்று விட்டார்.


நேற்று ஆயுதபூஜை என்பதால் வீட்டை சுத்தப்படுத்தி, சாமி கும்பிட, புஷ்பா தனது தாய் கவுசல்யா, இளைய மகள் லாவண்யா ஆகியோருடன் வீடு திரும்பினார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, வீடு முழுவதும் துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்த நிலையில், பீரோவின் ரகசிய அறையில் வைத்திருந்த 10 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை காணவில்லை.
மர்ம நபர்கள் கைவரிசை காட்டி நகை, பணத்தை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குபதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement