கால்நடை மருத்துவ முகாம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மு.துாரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார்.

அப்போது மு.துாரியில் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் வழங்கப்பட்டுள்ள மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காணை நோய், குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு நோய்களுக்கு டாக்டர் வினிதா சிகிச்சை அளித்தனர்.

சினை பரிசோதனை செய்தனர். பின் முக்கிய வீதிகளில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சுகாதாரம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டு காசநோயால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

Advertisement