எத்தியோப்பியாவில் சோகம்: தேவாலய கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி

அடிஸ்அபாபா: எத்தியோப்பியாவில் கட்டுமானப் பணி நடந்து வந்த தேவாலாயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து 25 பேர் உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் பலர் உயிரிழந்தனர். எனது மூன்று நண்பர்களும் உயிரிழந்தனர். விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






மேலும்
-
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
-
போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிப்பு எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
-
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
-
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு