கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரியகுளம் : தொடர் விடு முறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.

தற்போது அருவியல் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரும் காலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.எஸ்.பி., நல்லு நடவடிக்கை எடுக்க வேண்டும்.--

Advertisement